×

வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்

புதுடெல்லி: இந்தியாவில் வெங்காயம் தட்டுப்பாடின்றி கிடைப்பதை உறுதி செய்ய வெங்காய ஏற்றுமதிக்கு கடந்த ஆண்டு டிசம்பர் 8ம் தேதி முதல் நடப்பு ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை ஒன்றிய அரசு தடை விதித்திருந்தது. இந்நிலையில் வௌிநாட்டு வர்த்தக இயக்குநரகம் நேற்று வௌியிட்ட அறிவிப்பில், “வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்படுகிறது. இருப்பினும் மக்களவை தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் குறைந்தபட்ச ஏற்றுமதி விலை ஒரு டன்னுக்கு ரூ.45,000ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளது.

The post வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம் appeared first on Dinakaran.

Tags : New Delhi ,Union government ,India ,directorate of trade ,Waunadu ,Dinakaran ,
× RELATED ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாற்று டிஜிட்டல் கேஒய்சி